< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில்  முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அந்நிறுவன தலைவர் டிம் குக்!
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அந்நிறுவன தலைவர் டிம் குக்!

தினத்தந்தி
|
18 April 2023 1:27 PM IST

இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று திறக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தை திறந்து வைதார் அந்நிறுவன தலைவர் டிம் குக். விற்பனை நிலையத்தின் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் விற்பனையகத்துக்கு வெளியே வரிசையில் காத்து இருந்து தங்களுக்கு விரும்பிய ஐ போன்களை வாங்கி சென்றனர்.

தொடர்ந்து, வியாழக்கிழமை டெல்லியில் இரண்டாவது விற்பனையகத்தை ஆப்பிள்

நிறுவனம் திறக்க உள்ளது.

இந்த ஆப்பிள் விற்பனையகத்தில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்