< Back
தேசிய செய்திகள்
பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேகாலயத்தில்  63.91%  நாகாலாந்தில் 72.99% வாக்குகள் பதிவு
தேசிய செய்திகள்

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேகாலயத்தில் 63.91% நாகாலாந்தில் 72.99% வாக்குகள் பதிவு

தினத்தந்தி
|
27 Feb 2023 4:04 PM IST

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 63.91% சதவீதமும், நாகாலாந்தில் 72.99% சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுடெல்லி,

"வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 63.91% சதவீதமும், நாகாலாந்தில் 72.99%சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதேபோல் 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைவதால் வாக்காளர்கள் விறுவிறுவென தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.காங்கிரஸ் தரப்பில் மேகாலயத்தில் ராகுல் காந்தியும், நாகாலாந்தில் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் பிரசாரம் மேற்கொண்டனா்.

மேலும் செய்திகள்