< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 32 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..!!
|25 Dec 2022 1:11 AM IST
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் 32 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதற்காக ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வீதம் நேற்று காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 32 நிமிடத்தில் அனைத்து ரூ.300 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.