< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்: ரெயில்வே இணை மந்திரி தகவல்
|30 Jun 2024 3:57 AM IST
வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய ரெயில்வே இணை மந்திரி வி.சோமண்ணா கூறினார்.
பெங்களூரு,
மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஆலோசித்தோம். ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.