< Back
தேசிய செய்திகள்
சித்தராமையா கார் மீது முட்டை வீசியது கர்நாடகத்திற்கே அவமானம்; டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது கர்நாடகத்திற்கே அவமானம்; டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
18 Aug 2022 10:11 PM IST

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது கர்நாடகத்திற்கே அவமானம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இரியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடகில் நேற்று சித்தராமையா கார் மீது பா.ஜனதாவினர் முட்டை வீசி அவரை அவமானப்படுத்தி உள்ளனர். இது அவருக்கு மட்டும் ஏற்பட்ட அவமானம் அல்ல, கர்நாடகத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டை வீச்சு சம்பவத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பொறுப்பேற்க வேண்டும். வீரசாவர்க்கர் குறித்து சித்தராமையா கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதை முன்வைத்து பா.ஜனதாவினர் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வேலையை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்