< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

தினத்தந்தி
|
22 Nov 2023 5:39 PM IST

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் அந்த பகுதிக்கு வந்திருக்கிறார்.

அப்போது, சிறுமியை அந்த நபர் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணாததால் அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். அவர்களால் கண்டுபிடிக்க இயலாததால் மற்ற அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தேடத் தொடங்கினர். பின்னர் சிறுமியை கண்டுபிடித்தனர்.

சிறுமியின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் சிட்டி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்