< Back
தேசிய செய்திகள்
அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலி

தினத்தந்தி
|
28 July 2023 1:50 AM IST

அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலியாகினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சாலையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் கார் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதனையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இருந்த 3 பேரும் அமெரிக்க கடற்படை வீரர்கள் என்பதும், கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்