< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்து - 3 விவசாயிகள் உயிரிழப்பு
|22 Oct 2023 5:38 AM IST
கால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் சதாசிவ்பேட்டை அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை டிராக்டர் இழந்து தடுமாறியது.
இதனால் அருகே சென்று கொண்டிருந்த கால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த 3 விவசாயிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.