< Back
தேசிய செய்திகள்
நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது
தேசிய செய்திகள்

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது

தினத்தந்தி
|
23 Jan 2024 12:23 PM IST

நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.

போபால்,

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதேவேளை இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2022ம் ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் என மொத்தம் 20 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.

இந்த சிறுத்தைகள் மத்தியபிரதேச மாநிலம் குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இதில், பல்வேறு காரணங்களால் 7 சிறுத்தைகள் உயிரிழந்தன. எஞ்சிய சிறுத்தைகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. முன்னதாக, நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு சிறுத்தையும் இம்மாத தொடக்கத்தில் 3 குட்டிகளை ஈன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்