< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட் ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட் ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ்

தினத்தந்தி
|
28 Sept 2022 2:04 AM IST

ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட் ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் தங்கள் அறிக்கையை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினர்.

அதில், முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களான மந்திரி சாந்தி தாரிவால், கொறடா மகேஷ் ஜோஷி, எம்.எல்.ஏ. தர்மேந்தர் ரதோர் ஆகியோர் மோசமான ஒழுங்கீனத்துடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். போர்க்கொடி உயர்த்தியுள்ள எம்.எல்.ஏ.க்களில் முன்னணியில் உள்ளதாக தாரிவால் மீதும், ஜோஷியும், ரதோரும் தனியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியதாகவும், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, அந்த 3 பேர் மீதும் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் தாரிக் அன்வர் நேற்று இரவு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்