சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு: அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் - பா.ஜனதா எம்.எல்.சி. சொல்கிறார்
|சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவம் அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் - பா.ஜனதா எம்.எல்.சி. சொல்கிறார்
மைசூரு:
பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்திருக்க கூடாது. இதனை யாரும் நியாயப்படுத்தவில்லை. இந்த சம்பவத்துக்கு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சித்தராமையாவுக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற நடப்பது சகஜம் தான். மெரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, பா.சிதம்பரம், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இதுபோன்ற தாக்குதலை சந்தித்து உள்ளனர். அவர்கள் அந்த தாக்குதல்களை சகித்து கொண்டனர். அதேபோன்று சித்தராமையாவும் இந்த தாக்குதலை சகித்து கொள்ள வேண்டும். குடகில் நடக்க உள்ள யாத்திரையை சித்தராமையா வாபஸ் பெற வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பளிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.