< Back
தேசிய செய்திகள்
சித்தராமையாவுடன், திருமாவளவன் எம்.பி. சந்திப்பு
தேசிய செய்திகள்

சித்தராமையாவுடன், திருமாவளவன் எம்.பி. சந்திப்பு

தினத்தந்தி
|
22 July 2022 1:59 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

பெங்களூரு:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் அம்பேத்கர் கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு 'அம்பேத்கர் சுடர்' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


இந்த நிலையில் பெங்களூருவில் சித்தராமையாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது விழாவில் கலந்துகொள்ளும்படி சித்தராமையாவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். விழா அழைப்பிதழையும் வழங்கினார். பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'சித்தராமையா தொடர்ந்து அம்பேத்கர், பெரியார் கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.


இதனால் அம்பேத்கர் சுடர் விருதுக்கு அவரை தேர்வு செய்து உள்ளோம். அவர் முதல்-மந்திரியாக இருந்த போது ஆதிதிராவிடர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்' என்றார். சித்தராமையா கூறும்போது, 'அம்பேத்கர் சுடர் விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்று கொள்வேன்' என்றார்.

மேலும் செய்திகள்