< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார் கோரிக்கை
|15 Dec 2022 8:36 PM IST
சுமார் 4 கி.மீ. தூர பாதையை பயன்படுத்த முழு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக தனுஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின் போது பேசிய தென்காசி தொகுதி தி.மு.க. எம்.பி. தனுஷ்குமார், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை சுங்க கட்டணம் இன்றி பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுமார் 4 கி.மீ. தூர பாதையை பயன்படுத்த தனது தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதி மக்கள் முழு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதாகவும், அந்த கட்டணத்தை நீக்கி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.