< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட பொறியில் வசமாக வந்து சிக்கிய திருடன்.. சுவாரஸ்ய சம்பவம்
|24 Feb 2023 10:15 PM IST
சிறுத்தைக்கு வைத்த பொறியில் திருட்டு ஆசாமி ஒருவர் சிக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷர் பகுதியில் அவ்வப்போது சிறுத்தைகள் உலா வருவது வழக்கம். இதனால் மக்கள் நிம்மதியைத் தொலைக்கவே, எப்படியாவது சிறுத்தையைப் பிடித்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூண்டு ஒன்று வைத்துள்ளனர்.
உள்ளே பொறியாக கோழியையும் வைக்க, ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து அங்கு வந்த திருட்டு ஆசாமி, கோழியைத் திருடும் ஆசையில் உள்ளே நுழைந்து கூண்டுக்குள் சிக்கிக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து நடந்ததை அறிந்து கொண்ட அப்பகுதி மக்கள், தலையில் அடித்தவாறே கூண்டுக்குள் இருந்த திருட்டு ஆசாமியை வெளியில் விடுவித்தனர்.