< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தை மதம் சார்ந்ததாக மாற்ற முயற்சிக்கின்றனர் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
|30 May 2023 10:34 PM IST
நாடாளுமன்றத்தை மதம் சார்ந்ததாக மாற்ற முயற்சி செய்வதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டினார்.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்றம் மதச்சார்பற்ற இடம். ஆனால் சிலர் அதை மதம் சார்ந்ததாக மாற்ற முயற்சி செய்வதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டினார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "அன்று நாசம் செய்தவர்கள் இன்று நாட்டை ஆள்கிறார்கள். நாடாளுமன்றம் மதச்சார்பற்ற இடம். ஆனால் சிலர் அதை மதம் சார்ந்ததாக மாற்ற முயற்சிக்கின்றனர். நாட்டில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிக்கின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தின் போது அனைவரும் ஒன்றுபட்டு ஒன்றாக நின்று போராடினார்கள். அப்போது சுதந்திரப் போராட்டத்தை நாசப்படுத்த முயன்றவர்கள்தான் இப்போது நாட்டை ஆள்கிறார்கள்" என்று பினராயி விஜயன் கூறினார்.