< Back
தேசிய செய்திகள்
நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

Image Courtacy: PTI

தேசிய செய்திகள்

நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

தினத்தந்தி
|
29 July 2022 1:00 AM IST

நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி, பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ மற்றும் தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி முறையிடப்பட்டது.

அப்போது நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், 'எனக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிபதிகள் விசாரிக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. நீதிபதிகளுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்