< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை" - ஸ்மிருதி இரானி தகவல்
|20 July 2022 9:51 PM IST
முக்கிய அங்கன்வாடி மையங்களின் ஊழியர்களுக்கு மாதம் ரூ.4,500 கௌரவ ஊதியம் வழங்கப்படுவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் தொடர்பான கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில், அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கிய அங்கன்வாடி மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.4,500 கௌரவ ஊதியம் வழங்கப்படுவதாகவும், குறு அங்கன்வாடிகளில் பணியாளர்கள் மாதத்திற்கு ரூ.3,500 மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 2,250 வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே போல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.250, ஊழியர்களுக்கு மாதம் ரூ.500 செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.