< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கவர்னர் நியமனம் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவை திருத்தவேண்டிய அவசியம் இல்லை - மத்திய அரசு தகவல்
|16 March 2023 1:22 AM IST
கவர்னர் நியமனம் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவை திருத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கவர்னர்களை அந்தந்த மாநில முதல்-அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றே நியமிக்க வேண்டும் என சர்க்காரியா கமிஷன் அறிக்கை கூறுவதால், இந்திய அரசியலமைப்பின் 155-வது பிரிவை அரசு திருத்துமா? என மாநிலங்களவையில் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ஜான் பிரிட்டஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்தராய் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், "கவர்னர் நியமனங்கள், முதல்-அமைச்சர்களை கலந்தாலோசித்தே நடைபெறுவதாக அரசு கருதுகிறது. எனவே, அரசியலமைப்பின் 155-வது பிரிவை திருத்த வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.