< Back
தேசிய செய்திகள்
கொரோனா எங்கும் இல்லை, பாஜக எங்களை குறிவைக்கிறது: மல்லிகார்ஜூன் கார்கே
தேசிய செய்திகள்

கொரோனா எங்கும் இல்லை, பாஜக எங்களை குறிவைக்கிறது: மல்லிகார்ஜூன் கார்கே

தினத்தந்தி
|
25 Dec 2022 4:05 PM IST

கொரோனா எங்கும் இல்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா எங்கும் இல்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கர்கே பேசியிருப்பதாவது:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது அல்ல. இது விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சீன ஊடுருவல்கள் போன்ற மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது. இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பா.ஜ.க.வுக்கு பயத்தை அளித்துள்ளது.

அதனால் கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இங்கு எங்கேயும் கொரோனா இல்லை. இந்த யாத்திரையை நிறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாங்கள் பணிந்து விட மாட்டோம். ராகுல் காந்தி அவரது யாத்திரையை தொடருவார். பிரதமர் மோடி கூட முகக்கவசம் அணிவது இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்