பா.ஜ.க.விற்கு தென்மாநிலங்களில் பெருகும் ஆதரவு - பிரதமர் மோடி
|கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார். சேலத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா, கர்நாடகா அல்லது தமிழ்நாடாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்பாராத ஆதரவு பெருகி வருகிறது. இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் பா.ஜ.க. பேரணியில் பங்கேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.