< Back
தேசிய செய்திகள்
மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.72 ஆயிரம் திருட்டு;  மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.72 ஆயிரம் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
24 Aug 2022 8:31 PM IST

உப்பள்ளி டவுனில், மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.72 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் லிங்கராஜ் நகர் அருகே கேஷ்வாப்பூா் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் அதேப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரசாந்த் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது மர்மநபர்கள் சிலர், அவரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். நேற்று காலை கடைக்கு வந்த பிரசாந்த் கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பாா்த்துள்ளார்.

அப்போது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.72 ஆயிரம் திருட்டுேபாய் இருந்துள்ளது. அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் வித்யாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்