< Back
தேசிய செய்திகள்
குடகில்  50 கிலோ காபி கொட்டை திருட்டு; 4 பேர் கைது
தேசிய செய்திகள்

குடகில் 50 கிலோ காபி கொட்டை திருட்டு; 4 பேர் கைது

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

குடகில் 50 கிலோ காபி கொட்டை திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெல்லூதுகெரே கிராமத்தை சேர்ந்தவர் லெஸ்லி பின்டோ. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டத்தில் உள்ள குடோனில் 50 கிலோ காபி கொட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சித்தாப்புரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சித்தாப்புரா போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை சித்தாப்புரா போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த திருட்டு வழக்கு தொடர்பாக 4 பேரை சித்தாபுரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதானவர்கள் மால்தாரே கிராமத்தை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22), ரவி (34), கணேஷ் (32), சாமி (23) என்று தெரியவந்தது.

இவர்கள் காபி கொட்டைகளை திருடி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து கைதானவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 50 கிலோ காபி கொட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்