< Back
தேசிய செய்திகள்
யானை சிலைகளை திருடிய 6 பேர் கைது
தேசிய செய்திகள்

யானை சிலைகளை திருடிய 6 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 3:14 AM IST

மைசூருவில் யானை சிலைகளை திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு:

மைசூருவில் யானை சிலைகளை திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

மைசூரு மாவட்டம் மேட்டுகள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வாகனத்தில் இருந்த 6 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வாகனத்தில் 2 யானை சிலைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் போலீசார் அவர்களை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

விசாரணையில், மைசூரு கோகுலம் பகுதியை சேர்்ந்த மனோஜ்(வயது 26), சச்சின்(24), சந்தோஷ்குமார்(33), நஞ்சன்கூடுவை சேர்ந்த சந்திரசேகர மூர்த்தி(42), மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால்(36), புகத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகேஷ்(30) என்பதும், மைசூரு-பெங்களூரு விரைவு சாலையில் உள்ள நாகனஹள்ளி அருகே உள்ள சிலைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அந்த யானை சிலைகளை அவர்கள் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மேட்டுகள்ளி போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனம், யானை சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

பறிமுதல் செய்யப்பட்ட யானை சிலைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. பின்னர் மனோஜ், சச்சின், சந்தோஷ்குமார், சந்திரசேகர மூர்த்தி, கோபால், நாகேஷ் ஆகிய 6 பேரையும் மைசூரு கோர்ட்டில் மேட்டுகள்ளி போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்