< Back
தேசிய செய்திகள்
வாடகைக்கு வீடு தேடிய கொல்கத்தா வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

வாடகைக்கு வீடு தேடிய கொல்கத்தா வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
5 May 2023 12:15 AM IST

பெங்களூருவில் வாடகைக்கு வீடு தேடிய வாலிபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கொல்கத்தாவை சேர்ந்தவர் சென். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் ஆன்லைனில் வாடகைக்கு வீடு தேடினார். அப்போது விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் இருந்த செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசியவர் தன்னை, ராணுவ அதிகாரி எனவும், தற்போது மும்பையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் தனக்கு சொந்தமான வீடு பெங்களூருவில் வாடகைக்கு உள்ளதாக கூறினார். அதற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை என்றும் கூறினார். அதை நம்பிய சென், ராணுவ வீரர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.1½ லட்சத்தை முன்பணமாக செலுத்தினார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் ராணுவ வீரரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சைபர் கிராம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்