< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சாமிக்கு அணிவித்த 200 கிராம் தங்கநகைகள் திருட்டு
|8 Aug 2022 9:33 PM IST
பெங்களூருவில் சாமிக்கு அணிவித்த ௨௦௦ தங்க நகைகள் திருட்டுப்போனது.
பெங்களூரு:
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே சத்ய நாராயணா லே-அவுட்டில் வசிப்பவர் மோகன். இவரது வீட்டில் வரமகாலட்சுமி பண்டிகைக்காக சிறப்பு பூஜை செய்து, சாமிக்கு தங்க நகைகளை அணிவித்து வழிபட்டு இருந்தார்கள். சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகளை கழற்றாமல் அப்படியே வைத்திருந்தனர்.
அந்த சாமி சிலை ஜன்னல் அருகேயே இருந்தது. இந்த நிலையில், ஜன்னல் கதவை திறந்த மர்மநபர்கள், சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 200 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டார்கள். இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.