பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு 'லிப்ட்' கொடுத்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
|தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்தவுடன் வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் கெஞ்சைகொப்பா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 22 வயதில் மகள் இருக்கிறார். அவர் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், இளம்பெண் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார். இளம்பெண்ணும் வாலிபரை நம்பி மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.
சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு அருகே நிறுத்தி இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். இதைப்பார்த்த அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்தனர். உடனே வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாகிதுல்லா என்ற வாலிபரை கைது செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.