நாடகமாடி திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் காதலனுடன் ஓட்டம்
|மைசூருவில் நாடகமாடி திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை மீட்டு தரக்கோரி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மைசூரு: மைசூருவில் நாடகமாடி திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை மீட்டு தரக்கோரி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடக்க இருந்தது. ஆனால் இளம்பெண் தனக்கு தாலிகட்டும் நேரத்தில் திடீரென்று மயங்கி விழுவது போல் நாடகமாடினார். இதையடுத்து அவரது திருமணம் நின்றது. இதையடுத்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது வேறொரு வாலிபரை காதலிப்பதாகவும், அதனால் மயக்கம் போட்டு விழுவது போல் நாடகமாடி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார். இதைகேட்டு பெற்றோர், மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இருவீட்டாரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
காதலனுடன் ஓட்டம்
இந்த நிலையில் நேற்று இளம்பெண், தனது காதலனுடன் வீட்டில் இருந்து ஓடியதாக கூறப்படுகிறது. இதையறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், கிருஷ்ணாராஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை, அவளது காதலன் அழைத்து சென்றுவிட்டதாகவும், மகளை மீட்டு தரும்படி கூறினர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரது காதலனையும் வலைவீசி தேடி வருகின்றனர்.