சொத்து தகராறில் தந்தையை கொன்ற வாலிபர்
|பீதர் அருகே சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பீதர்:
பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகா கட்டபோரா கிராமத்தை சேர்ந்தவர் திகம்பர துக்காராம் (வயது 65). இவரது மகன் தினேஷ் (35). இந்த நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தரும்படி துக்காராமிடம், தினேஷ் கேட்டு வந்து உள்ளார். ஆனால் சொத்தை பிரித்து கொடுக்க துக்காராம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் சொத்தை பிரிப்பது தொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதுபோல நேற்று முன்தினமும் சொத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துக்காராமை, தினேஷ் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த உயிருக்கு போராடிய துக்காராமை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று துக்காராம் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து உம்னாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேசை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.