< Back
தேசிய செய்திகள்
தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்  புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்
தேசிய செய்திகள்

தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்

தினத்தந்தி
|
21 May 2022 10:14 PM IST

தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்

மங்களூரு

உடுப்பியில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண், அவருடைய புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

செயலி மூலம் பேசினார்

உடுப்பியைச் சேர்ந்தவர் அசோக் ஷெட்டி. தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார். அதன்மூலம் அவர் பலரிடம் தொடர்பு கொண்டு சாட்டிங் மூலம் பேசி வந்தார். அதுபோல் அவர் பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் சாட்டிங் மூலம் பேசி வந்தார்.

இதையடுத்து இருவரும் நண்பர்களாக பேசி பழகி வந்தனர். மேலும் இருவரும் தங்களது செல்போன் எண்களையும் பரிமாறி பேசி வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அசோக் ஷெட்டியிடம் இருந்து அவரது புகைப்படங்களை அந்த பெண் பெற்றார்.

பணம் கேட்டு மிரட்டல்

சிறிது நாட்கள் கழித்து ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லை என்றால் தன்னிடம் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அசோக் ஷெட்டியிடம் கூறி அந்த பெண் மிரட்டி உள்ளார். ஆனால் அந்த பெண்ணின் மிரட்டலுக்கு பணியாத அசோக் ஷெட்டி அவருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்த பெண், அசோக் ஷெட்டியின் நண்பர்கள், அவரது வாட்ஸ்-அப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவருடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அசோக் ஷெட்டி இதுபற்றி பாகல்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்