< Back
தேசிய செய்திகள்
பெண்ணை தாக்கி தங்கநகைகள் பறிப்பு
தேசிய செய்திகள்

பெண்ணை தாக்கி தங்கநகைகள் பறிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2022 8:50 PM IST

குந்தாப்புரா அருகே பெண்ணை தாக்கி தங்கநகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கொர்கி கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கடினபெட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பள்ளி முடிந்து பஸ்சில் வரும் தனது பிள்ளைக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அந்த பெண் முன்பு வந்து நின்றனர். பின்னர் மர்மநபர்கள், பெண்ணை தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதற்கிடையே பெண் தலையில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பெண்ணை மீட்டு மணிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்