மைத்துனன் பலாத்காரம் செய்தது பற்றி கணவரிடம் கூறிய மனைவி... அடுத்து நடந்த டுவிஸ்ட்
|கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி கணவரிடம், மனைவி கூறியதும் இனி நீ என்னுடைய மனைவியே இல்லை என கூறி அவர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் கடாவ்லி கொத்வாலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சத்யநாராயண் பிரஜாபதி கூறும்போது, அந்த பெண்ணின் கணவர் இல்லாதபோது, கணவரின் சகோதரர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில், கடந்த 2-ந்தேதி கணவர் வெளியே சென்றபோது, வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில், அவருடைய சகோதரர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.
கணவர் வீட்டுக்கு திரும்பியதும் நடந்த விசயங்களை அந்த பெண் கணவரிடம் அழுது கொண்டே கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு அதிர்ச்சியான பதிலே அவருக்கு கிடைத்துள்ளது. அந்த கணவர், பெண்ணை நோக்கி, இனி நீ என்னுடைய மனைவியே இல்லை. நீ என்னுடைய மைத்துனி என கூறியிருக்கிறார். இதனை கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண் திகைத்து போயிருக்கிறார்.
அடுத்த நாள் பொழுது விடிந்ததும், தனக்கு ஒரு விடியல் கிடைக்கும் என அந்த பெண் நினைத்திருக்கிறார். ஆனால், கணவரும், கணவரின் தம்பியும் பேசி வைத்ததுபோல் ஒன்றாக பெண்ணின் அறைக்கு வந்துள்ளனர்.
கணவர் ஆவேசத்தில், மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு, துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணை கொல்ல பார்த்திருக்கிறார். இதனை கணவரின் தம்பி மொபைல் போனில் வீடியோவாக படம் எடுத்திருக்கிறார். எனினும், அவர்களிடம் இருந்து அந்த பெண் தப்பி வெளியே ஓடியிருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி உடனடியாக சமூக ஊடகம் வழியே அந்த பெண் புகாராக தெரிவித்ததுடன், வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இதனை கவனத்தில் கொண்ட போலீசார், பாலியல் பலாத்காரம் (376), கொலை முயற்சி (307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரெண்டு பிரஜாபதி கூறியுள்ளார்.