< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க கணவனை தவிக்க விட்டு கேரளாவிற்கு எஸ்கேப் ஆன மனைவி
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க கணவனை தவிக்க விட்டு கேரளாவிற்கு எஸ்கேப் ஆன மனைவி

தினத்தந்தி
|
3 March 2024 2:21 PM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 11 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம்,

கடலூர் அருகே உள்ள வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (19). இவர்களுக்கு 11 மாதங்களேயான கலையரசன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (23) என்பவருக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா திடீரென தனது குழந்தையுடன் மாயமானார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் கள்ளக்காதலன் ஜெயசூர்யாவுடன் மனைவி சென்றது தெரியவந்தது.

அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வாடகை வீட்டில் ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாயார் உஷா மற்றும் கள்ளக்காதலி பிரியா அவரது குழந்தை என அனைவரும் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் அதேபகுதியில் வசித்து வந்த பிரியாவின் உறவினரான சிலம்பரசன் இவரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது, பிரியா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சிலம்பரசன் இதுகுறித்து திரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் பிரியா மற்றும் ஜெயசூர்யாவிடம் விசாரணை நடத்திய போது கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து திருச்சூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியதாக கூறினார்.

இதையடுத்து இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரியா, ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்