< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த காய்கறி வியாபாரி.!
|9 July 2023 8:05 PM IST
விலை அதிகரித்துவரும் தக்காளியை பாதுகாக்க வியாபாரி ஒருவர் பவுன்சர்களை நியமித்துள்ளார்.
லக்னோ,
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியில் விலை அதிகரித்து கானப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தக்காளிகள் கடையிலும், வயல் வெளிகளிலும் திருடப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துவருகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரனாசியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அஜய் என்பவர், தக்காளியை பாதுகாக்க கடையின் முன்பகுதியில் இரு பவுன்சர்களை நியமித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால், சிலர் 50, 100 கிராமுக்கு தக்காளி கேட்கின்றனர். கடைக்கு வரும் மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், திருட்டிலும் ஈடுபடுகின்றனர். அதனால் பவுன்சர்களை நியமித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.