< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி
|19 Aug 2022 4:52 PM IST
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
திருவனந்தபுரம்,
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார். பெங்களூரு ஐயப்பன் கோவிலில் இருந்து பத்தனம்திட்டாவுக்கு வந்த அவர், பம்பையில் இருந்து யாத்திரையாக சன்னிதானம் சென்றார்.
மலையில் இருந்து இறங்கிய பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 26-வது முறையாக சபரிமலைக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் கொச்சி விமான நிலையத்திலிருந்து மந்திரி டெல்லி திரும்பினார்.