< Back
தேசிய செய்திகள்
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு
தேசிய செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
16 Oct 2022 12:30 AM IST

அஜ்ஜாம்புராவில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சம் நகைகள் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். விவசாயி. இவர் தனக்கு சொந்்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 172 கிராம் தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் லாக்கரில் வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் வங்கி லாக்கரில் இருந்த நகைகளை அவர் எடுத்துள்ளார்.

அந்த நகைகளை ஒரு பையில் ேபாட்டு தனது ஸ்கூட்டரில், இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார். இதனை கவனித்த ஒரு மர்மநபர், சந்தோசை பின்தொடர்ந்து சென்று, அவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்த வேளையில், ஸ்கூட்டரில் இருந்து ரூ.6 லட்சம் நகைகளை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய சந்தோஷ், ஸ்கூட்டரின் இருக்கை திறக்கப்பட்டு அதில் இருந்து நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்போில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்