< Back
தேசிய செய்திகள்
ரா உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல்லின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு
தேசிய செய்திகள்

ரா உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல்லின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு

தினத்தந்தி
|
24 Jun 2022 4:59 PM IST

நாட்டின் ரா உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல்லின் பதவி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நாட்டின் ரா எனப்படும் மத்திய உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் இருந்து வருகிறார். 1984ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவரது பதவி காலம் நடப்பு ஆண்டு ஜூன் 30ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், அவரது பதவி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிறப்பித்து உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் கோயல்லுக்கு, ஜூன் 30ந்தேதி வரையிலான ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன்படி அவர் வருகிற 30ந்தேதி வரை பதவியில் இருப்பார்.

இந்நிலையில், கூடுதலாக அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் கோயல் நெருங்கி பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்