< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முல்லைப் பெரியாறு அணையில் நீரை பாசனத்துக்கு திறந்து விட விவசாயிகள் மனு - ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு
|23 Sept 2022 5:54 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் நீரை பாசனத்துக்கு திறந்து விடக்கோரிய விவசாயிகளின் பொதுநல மனுவை ஏற்க சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது.
புதுடெல்லி,
முல்லை பெரியாறு அணையில் இருந்து போதுமான நீரை பாசனத்துக்கு திறந்து விட உத்தரவிடக்கோரி விவசாயிகள் சார்பில் பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யபட்டது.
விவசாயிகளின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்தனர்.
விவசாயிகளுக்காக தமிழக அரசு நீரை திறக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.