ரெயிலில் கொடுத்த சமோசாவில் கிடந்த பொருள் - அதிர்ந்த ரெயில் பயணி
|ரெயிலில் பயணித்த ஒருவர், இந்திய ரெயில்வே கேட்டரிங் வழங்கும் சமோசாவில் ஒரு "மஞ்சள் காகிதம்" இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
லக்னோ:
மும்பை-லக்னோ ரயிலில் பயணித்த ஒருவர், ரெயிலில் வழங்கும் சமோசாவில் "மஞ்சள் காகிதம்" இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளார்.
இதில் அவர் கூறியது, "ஐஆர்சிடிசி பேண்ட்ரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அதில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு பார்த்தேன். அதில் பைபர் காகிதம் ஒன்று இருந்ததை கண்டு அச்சமடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் ஐஆர்சிடிசி கூறியதாவது,
உணவில் காகிதம் இருப்பதை கண்டு வருத்தப்படுகிறோம். இதுபோன்ற சிரமத்திற்கு உங்களை கொண்டு சென்றதற்கு மனிக்கவும். பிஎன்ஆர் மற்றும் மொபைல் எண்ணை தன் ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என ஐஆர்சிடிசி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.