< Back
தேசிய செய்திகள்
இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் - சாக்ஷி மாலிக்
தேசிய செய்திகள்

இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் - சாக்ஷி மாலிக்

தினத்தந்தி
|
26 Jun 2023 8:24 AM IST

பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சாக்ஷி மாலிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல. மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சீர்திருத்தம் குறித்து, வாக்குறுதி அளித்தபடி, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் காத்திருப்போம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்