காபி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி...
|ஆன்லைன் வழியே ஆர்டர் செய்த காபியில் சிக்கன் துண்டு ஒன்று கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் அதனை டுவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
சுமித் சவுரப் என்பவர் ஆன்லைன் வழியே காபி ஆர்டர் செய்துள்ளார். அவர் எப்போதும் ஆர்டர் செய்ய கூடிய டெல்லியில் அமைந்துள்ள நிறுவனத்தில் இருந்து காபியை வரவழைத்து உள்ளார். இதுதவிர, சொமேட்டோ வழியே அந்த காபியை வரவழைத்து உள்ளார்.
சுமித்தின் மனைவி சைவ உணவு சாப்பிடுபவர் ஆவார். அவர் அந்த காபியை அருந்தியபோது, அதில் சிக்கன் துண்டு ஒன்று கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அவரது கணவருக்கும் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி சுமித் டுவிட்டரில் புகைப்பட ஆதாரத்துடனும், ஆதங்கத்துடனும் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,சொமேட்டோவிடம் (தர்ட் வேவ் இந்தியா) காபி ஆர்டர் செய்தேன்.
ஆனால், இது ரொம்ப அதிகம். காபியில் ஒரு சிக்கன் துண்டு கிடக்கிறது. இன்றுடன் உங்களுடனான அதிகாரப்பூர்வ தொடர்பு துண்டிக்கப்படுகிறது என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அந்த இரு நிறுவனங்களும் மன்னிப்பு கோரி பதிலுக்கு டுவீட் செய்துள்ளன.