திருப்பதி லட்டு விவகாரம்: ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் - ராகுல் காந்தி
|திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில்,
இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன.திருப்பதியில் உள்ள கடவுள் பாலாஜி இந்தியாவிலும், உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வமாக இருக்கிறார். இந்தக் கலப்பட பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.