< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணின் மாதவிடாய் ரத்தம் எடுத்து பணம் ஈட்டிய உறவினர்கள்... பட்டினி போட்டு கொடுமை
தேசிய செய்திகள்

இளம்பெண்ணின் மாதவிடாய் ரத்தம் எடுத்து பணம் ஈட்டிய உறவினர்கள்... பட்டினி போட்டு கொடுமை

தினத்தந்தி
|
11 March 2023 10:42 PM IST

மராட்டியத்தில் பணம் ஈட்ட இளம்பெண்ணின் மாதவிடாய் ரத்தம் எடுத்து மாந்திரீக வேலைக்கு உறவினர்கள் கொடுத்த அவலம் தெரிய வந்து உள்ளது.



புனே,


மராட்டியத்தின் புனே நகரில் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இளம்பெண்ணை மாதவிடாய் காலத்தில் பட்டினி போட்டு, அவரது கை, கால்களையும் புகுந்த வீட்டு உறவினர்கள் கட்டி போட்டு உள்ளனர்.

இதன்பின்னர் பஞ்சு கொண்டு, அவரது ரத்தம் எடுக்கப்பட்டு மாந்திரீக வேலைக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஈடாக ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

நீண்ட நாட்களாக இந்த கொடுமை நடந்து வந்து உள்ளது. இதுபற்றி தனது பெற்றோரிடம் அந்த பெண் தெரிவித்து அழுது உள்ளார். இதன்பின்பு இந்த விசயம் புகாராக போலீசில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த மந்திரி சந்திகாந்த் பாட்டீல், அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள, மிக மோசம் வாய்ந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்