< Back
தேசிய செய்திகள்
வீட்டின் அருகே பயங்கரம் முன்விரோதத்தில் ரவுடி படுகொலை
தேசிய செய்திகள்

வீட்டின் அருகே பயங்கரம் முன்விரோதத்தில் ரவுடி படுகொலை

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

பெங்களூருவில் வீட்டின் அருகேயே ரவுடி குத்தி படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு

ரவுடி

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி அருகே மோதி ரோட்டில் உள்ள மசூதி பகுதியில் வசித்து வந்தவர் சையத் சுகேல்(வயது 28). இவர், ரவுடி ஆவர். சையத் சுகேல் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்தில் சையத் சுகேலின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அவர் வீட்டில் இருந்தார்.

அப்போது சிலர் சையத் சுகேலிடம் பேச வேண்டும் என்று கூறி அழைத்தனர். இதையடுத்து, அவரும் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சையத் சுகேலை சரமாரியாக குத்தினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

முன்விரோதத்தில் கொலை

உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய சையத் சுகேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் டி.ஜே.ஹள்ளி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டும், சையத் சுகேல் உடலை கைப்பற்றியும் விசாரித்தனர்.

அப்போது சையத் சுகேலை முன்விரோதம் காரணமாக எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் இருந்த சையத் சுகேலை வெளியே அழைத்து வந்து தீர்த்துக்கட்டி இருப்பதால், அவருக்கு தெரிந்த நபர்களும் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்