< Back
தேசிய செய்திகள்
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
தேசிய செய்திகள்

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

தினத்தந்தி
|
12 Sept 2024 10:39 PM IST

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015 ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த நிலையில், தற்போது மறைந்துள்ளார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்