< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அரசியல் ஆலோசகர்..!
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அரசியல் ஆலோசகர்..!

தினத்தந்தி
|
4 Dec 2023 11:19 AM IST

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசின் இந்த வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியை வடிவமைத்ததற்காக சுனில் பெரிதும் பாராட்டப்பட்டார். அதோடு முதல்-மந்திரி சித்தராமையா அரசில் அவருக்கு கேபினட் மந்திரி அந்தஸ்திலான பதவியும் வழங்கப்பட்டது.

தற்போது, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. தெலுங்கானாவை போலவே சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் சுனில் களத்தில் இறங்கி வேலை செய்தார். ஆனால் அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோர் சுனிலின் பரிந்துரைகள் எதையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு வியூகம் வகுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும் செய்திகள்