< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கண்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட விமானம்... ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்
|8 Nov 2022 10:38 PM IST
கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லப்படும் விமானம் ஐதராபாத் சென்றடைய 20 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்,
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்று, அதன் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஏலத்திற்கு வந்தது. இந்த விமானத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இதனை அவர் உணவகமாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ஏலத்தில் எடுக்கப்பட்ட விமானத்தை கண்டெய்னர் லாரி மூலம் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஐதரபாத்திற்கு கொண்டு செல்கின்றனர். சுமார் 30 கி.மீ. வேகத்தில் இரவில் மட்டுமே இயக்கப்படும் இந்த லாரி, ஐதராபாத் சென்றடைய 20 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. கண்டெய்னர் லாரி மூலம் விமானத்தை கொண்டு சென்ற காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.