< Back
தேசிய செய்திகள்
ஒய்யாரமாக படுத்துக்கொண்டு விமானத்திற்குள் சிகரெட் பிடித்து அலற விட்ட நபர்... பாய்ந்தது நடவடிக்கை
தேசிய செய்திகள்

ஒய்யாரமாக படுத்துக்கொண்டு விமானத்திற்குள் சிகரெட் பிடித்து அலற விட்ட நபர்... பாய்ந்தது நடவடிக்கை

தினத்தந்தி
|
11 Aug 2022 7:59 PM IST

விமானத்திற்குள் சிகரெட் பிடித்த நபர் மீது மத்திய விமானப் போக்குவரத்து மந்திரியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

துபாயில் இருந்து டெல்லி வந்த பல்விந்தர் கட்டாரியா என்பவர், விமானத்தில் விதிகளை மீறி சிகரெட் பற்றவைத்து புகைபிடித்தார். அவர் புகை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், அவர் மீது விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், பல்விந்தர் கட்டாரியா மீது விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்