< Back
தேசிய செய்திகள்
ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த நோயாளி...!
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த நோயாளி...!

தினத்தந்தி
|
30 Aug 2022 3:28 PM IST

கேரளாவில் ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரின் உயிர் பறிபோனது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்க கூறினர்.

இதையடுத்து கோயமோனை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்த போது ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் போனது. இதையடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து திறந்தனர்.

பின்னர் கோயமோன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சைக்கு கால தாமதம் ஆனதால் கோயமோன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்