< Back
தேசிய செய்திகள்
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
25 Aug 2022 11:59 AM IST

இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசு விடுமுறை முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்தனர்.

இதனால் வாகன சோதனை நடைபெறும் அலிபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனைக்காக சுமார் 1 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வைகுந்தம் காம்ளக்ஸ் 30 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 74,748 பேர் தரிசனம் செய்தனர். 39,086 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

மேலும் செய்திகள்