மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நாளை பதவியேற்பு!
|மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நாளை பொறுப்பேற்க உள்ளார்.கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.